இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் பயணம்…!
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக இன்று சிங்கப்பூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க இன்று முதல் 8 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஜப்பான் நாட்டில் அதிக முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் முக ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கீட்டோ நகரிலும் ஜப்பானிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஜப்பான் தொழில்துறை அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் வர்த்தக முதலீட்டு மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கவுள்ளார். தமிழ்நாட்டை 2023-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை எட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.
இலக்கை அடைய உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு தொழித்துறை பல்வேறு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜப்பான், சிங்கப்பூருக்கு சென்று முதலீட்டாளர்கள், வர்த்தக அமைப்பினர், அதிகாரிகளை சந்திக்க உள்ளார் முதல்வர். சிங்கப்பூர் பயணத்தை தொடர்ந்து, முதல்வர் ஜப்பானில் சில நாட்கள் தங்கியிருந்து முதலீட்டாளர்களை சந்திக்கிறார்.