இவரது மறைவு செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
நடிகர் சரத் பாபு மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
பிரபல நடிகரான நடிகர் சரத்பாபு இவர் கடந்த நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் ஏஜிஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
நிழல் நிஜமாகிறது. முள்ளும் மலரும். உதிரிப்பூக்கள். வேலைக்காரன், அண்ணாமலை, முத்து போன்ற ஏராளமான திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த
கதாப்பாத்திரங்கள் இன்றும் தமிழ் இரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர். திரையுலகினர். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி.#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/ZwR5KaUD83
— TN DIPR (@TNDIPRNEWS) May 22, 2023