இந்த ஆண்டில் நாங்கள் சிறந்த அணிகளில் ஒன்றாக இருக்கவில்லை – டு பிளெசிஸ் ஓபன் டாக்

Faf du Plessis

ஒட்டுமொத்த அணியாக பார்க்கும்போது, நாங்கள் பிளே ஆஃப் செல்ல தகுதியற்றவர்களாக இருந்தோம் என ஃபாஃப் டூபிளெசில் ஓபன் டாக்.

நடப்பாண்டு 16-ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதி லீக் போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது, இப்போட்டியில், குஜராத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. ஏற்கனவே, பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் அணி தாக்கு பெற்றிருந்ததால், பெங்களூரு அணி இப்போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.

இந்த சமயத்தில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் விராட் கோலியை தவிர வேறு யாரும் சொல்லும்படி சிறப்பாக செயல்படவில்லை. கோலி மட்டுமே ஒருபக்கம் நின்று சதத்தை விளாசினார். இதனால் பெங்களூரு அணி இறுதியில் 20 ஓவர் முடிவில் 197 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி சிறப்பாக விளையாடி 19.1 ஒவேரில் 198 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இதில், சுப்மன் கில் 104 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் காலத்தில் இருந்தார். குஜராத் அணி வெற்றியால் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. மறுபக்கம் 16 புள்ளிகளுடன் காத்திருந்த மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

பெங்களூரு அணி தோல்வியை அடுத்து, ரசிகர்கள் பெறும் ஏமாற்றத்தையே மீண்டும் சந்தித்தனர். இந்த முறையாவது சாம்பியன் பதட்டத்தை தட்டி செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணியின் ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை ஏமாற்றமே கிடைத்தது. இதனால் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சமயத்தில், பெங்களூரு அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பேசிய கேப்டன் டு பிளெசிஸ், நடப்பு சீசனில் பெங்களூரு அணி சிறப்பான அணிகளில் ஒன்றாக இருக்கவில்லை என என்பதே எனது நேர்மையான கருத்து என தெரிவித்தார். மேலும், அணியில் சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், ஆனால், ஒட்டுமொத்த அணியாக பார்க்கும்போது, பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல தகுதியற்றவர்களாகவே இருந்தோம் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்