விஷச் சாராயம் – 12 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளது சிபிசிஐடி!
விஷச் சாராயம் குடித்து 14 பேர் பலியான விவகாரத்தில் 12 பேர் மீது கொலை வழக்குப்பதிவு.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 12 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளது சிபிசிஐடி. இதில், மரக்கணத்தை சேர்ந்த அமரன், ரவி, முத்து ஆறுமுகம், ரசாயன நிறுவன உரிமையாளர் இளையநம்பி உட்பட 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 12 பேரில் மதன் என்பவர் தவிர மற்ற 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் நாளை முதல் குழுக்களாக பிரிந்து விசாரணையை தீவிரப்படுத்த உள்ளது சிபிசிஐடி. இந்த வழக்கின் ஆவணங்களை மரக்காணம் போலீஸ் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று காலை ஒப்படைத்தனர்.