10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்…! 12,828 பேருக்கு அஞ்சல் துறையில் வேலை..!
இந்திய அஞ்சல் துறை (DoP), இந்தியா முழுவதும் காலியாக உள்ள ஜிடிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கும் மேலாக, அஞ்சல் துறை (DoP) நாட்டின் தகவல்தொடர்புக்கு முதுகெலும்பாக உள்ளது மற்றும் நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இது பல வழிகளில் இந்திய குடிமக்களின் வாழ்க்கையில் தொடர்புடையதாக உள்ளது.
இதன்மூலம் அஞ்சல்களை வழங்குதல், ஒவ்வொரு கிராமத்திற்கும் அரசாங்கத்தின் சிறு சேமிப்புத் திட்டங்களின் கீழ் வைப்புத்தொகைகளை வழங்குதல், அஞ்சல் ஆயுள் காப்பீடு (பிஎல்ஐ) மற்றும் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு (ஆர்பிஎல்ஐ) ஆகியவற்றின் கீழ் ஆயுள் காப்பீடு வழங்குதல் போன்ற சேவைகளை செய்து வருகிறது.
அஞ்சல் துறையானது, 1,55,000 க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களுடன் உலகில் மிகவும் பரவலாக விநியோகிக்கப்படும் அஞ்சல் வலையமைப்பைக் கொண்டுள்ளது. தற்பொழுது, இந்திய அஞ்சல் துறை, இந்தியா முழுவதும் காலியாக உள்ள 12,828 கிராமின் டாக் சேவக் ஜிடிஎஸ் (ஜிடிஎஸ்) பணிக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப்படிவத்தை வெளியிட்டுள்ளது.
இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை படித்துவிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
தகுதி & வயது வரம்பு:
அஞ்சல் துறையில் சேர விரும்பும் விண்ணப்பதாரர் கணிதம் அல்லது ஆங்கிலத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் மற்றும் உள்ளூர் மொழியில் திறன் உள்ளவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf -ஐப் பார்த்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம்:
பொது மற்றும் ஒபிசி(OBC) பிரிவினருக்கு ரூ.100 கட்டணமும், பெண்கள், எஸ்.சி/எஸ்.டி, பிரிவினருக்கு கட்டணம் இல்லை. இந்த கட்டணத்தை ஆன்லைன் / ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் அறிவிப்பை படித்து தெரிந்து கொண்டு அதன்பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. தகுதியும், ஆர்வமும் உடைய விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மாநில வாரியான காலியிட விவரங்கள்:
கிராமின் டாக் சேவக் ஜிடிஎஸ் (ஜிடிஎஸ்) பணிக்கு ஆந்திரா, அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
More Info : https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Final_Post_Consolidation.pdf
கடைசி தேதி:
இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் இன்று முதல் தொடங்கி (22-05-2023) விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 11ம் தேதி வரை உள்ளது. மேலும், விண்ணப்பத்திற்கான கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி ஜூன் 11ம் தேதி வரை உள்ளது.