கருணாநிதி நூற்றாண்டு விழா – முதலமைச்சர் ஆலோசனை!

கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் குறித்து அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் நாள் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பிறந்தார்.
அவரது நூற்றாண்டு விழா வருகின்ற ஜூன் 3ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை ஓராண்டுக்கு கொண்டாட உள்ளதாக திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.