தமிழில் உன்னதமான திருக்குறள்..! பப்புவா நியூ கினியா மொழியில் வெளிட்டார் பிரதமர் மோடி..!

Thirukkural in Tok Pisin

பப்புவா நியூ கினியாவின் டோக் பிசின் மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக பப்புவா நியூ கினியாவிற்கு நேற்று சென்றடைந்தார். அவரை பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் வரவேற்றார். டோக் பிசின் என்பது பப்புவா நியூ கினியாவின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும்.

தென்மேற்கு பசிபிக் தேசத்தின் மக்களுக்கு இந்திய சிந்தனை மற்றும் கலாச்சாரத்தை நெருக்கமாக கொண்டு செல்வதற்காக டோக் பிசின் மொழியில் தமிழில் மிகவும் உன்னதமான நூலான திருக்குறளை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் இன்று வெளியிட்டனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தின் சுபா சசீந்திரன் மற்றும் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட இந்த புத்தகம், இந்திய சிந்தனை மற்றும் கலாச்சாரத்தை பப்புவா நியூ கினியா மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருகிறது என்றுள்ளார்.

மேலும், பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்