தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பது யார் தெரியுமா..? விக்ரம் இல்லை.!!

ரஜினியின் 170-வது திரைப்படத்தை இயக்குனர் டி ஜெ ஞானவேல் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.  இந்த திரைப்படம் வித்தியாசமான கதைகளத்தை  வைத்து உருவாக்கப்பட உள்ளது.

Rajinikanth T J gnanavel
Rajinikanth T J gnanavel Image Source Twitter Lazy Mukil<br >

ஏற்கனவே,படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாவது உண்டு. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவியது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனை தொடர்ந்து தற்பொழுது கிடைத்த தகவல் என்னவென்றால் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்களை கசிந்துள்ளது. அந்த கதாபாத்திரத்தில்  நடிகர் அர்ஜுன் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thalaivar170 update
Thalaivar170 update Image Source Twitter Lazy Mukil<br >

மேலும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால்சலாம் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.