இத்தாலியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 14 பேர் பலி..! 36,000 பேர் இடம்பெயர்வு..!

Italyfloods

இத்தாலியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் கடந்த வாரத்தில் பெய்த பலத்த மழையால் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தினால் 14 உயிரிழந்துள்ளனர். இதனால் எமிலியா-ரோமக்னா பகுதியின் நகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள தெருக்கள் முற்றிலுமாக நீரினால் சூழப்பட்டது.

மேலும், இந்த கடுமையான வெள்ளத்தால் 36,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாகவும், இந்த வெள்ளம் காரணமாக 305க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன மற்றும் நாட்டில் 500 க்கும் மேற்பட்ட சாலைகள் சேதமடைந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, அவசரநிலையை சமாளிக்க ஜப்பானில் நடைபெறும் ஜி7 மாநாட்டிலிருந்து வெளியேறுவதாக நேற்று தெரிவித்தார். இத்தகைய சிக்கலான தருணத்தில் நான் இத்தாலியில் இருந்து வெகு தொலைவில் இருக்க முடியாது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்