மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு… 10 பேர் பலி, 9 பேர் படுகாயம்.!
வடக்கு மெக்சிகோவில் கார் பந்தய நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 9 பேர் காயமடைந்தனர்.
மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள பாஜா கலிபோர்னியாவில் நடைபெற்ற கார் கண்காட்சியின்போது, திடீரென்று வேனில் வந்திறங்கிய கும்பல் அங்கே கார் பந்தயத்தில் கலந்து கொண்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதில் 10 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து முனிசிபல், மாநில காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேயர் அர்மாண்டோ அயாலா ரோபிள்ஸ் கூறுகையில், துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க சிறப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.