கலைஞர் நூற்றாண்டு விழா..! ஓராண்டுக்கு கொண்டாட உள்ளதாக திமுக செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவு..!

MK Stalin

கலைஞர் நூற்றாண்டு விழாவை ஓராண்டுக்கு கொண்டாட உள்ளதாக திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சரான மு.கருணாநிதி 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் நாள் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பிறந்தார். அவரது நூற்றாண்டு விழா வருகின்ற ஜூன் 3ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் தொடங்கியது. அந்த கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஜூன் 3 முதல் அடுத்தாண்டு ஜூன் 3ம் தேதி வரை ஓராண்டுக்கு கொண்டாட உள்ளதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கருணாநிதி பிறந்தநாளை அனைத்து வார்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், திருவாரூர் காட்டூரில் ஜூன் 20ம் தேதி கலைஞர் கோட்டத்தை, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்