புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும், பிரதமர் அல்ல..! ராகுல் காந்தி ட்வீட்..!

RahulGandhi Camp

புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பழைய நாடாளுமன்றக் கட்டிடம் 1927ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு தற்போது 96 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த பழைய கட்டிடம் இன்றைய தேவைக்கு போதுமானதாக இல்லை என்ற காரணத்தால் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10 அன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் 64,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடம் அனைத்து பணிகளும் முடிந்து வரும் மே 28ம் தேதி திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க கூடாது எனவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்