நீங்கள் பிரபலமானவர், எனக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறீர்கள்… மோடியின் அமெரிக்க வருகை குறித்து பைடன்.!

மோடியின் அமெரிக்க வருகையை முன்னிட்டு, அவ்விழாவில் கலந்து கொள்ள டிக்கெட்கள் கேட்டு தன்னை தொந்தரவு அளிப்பதாக பைடன், கூறியுள்ளார்.
நேற்று ஜப்பானில் நடந்த ஜி-7 மாநாட்டின் முக்கிய தலைவர்கள் சந்திப்பில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர், பிரதமர் மோடி பேசும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தங்களுக்கு டிக்கெட்கள் வேண்டுமென்று முக்கிய நபர்களின் கோரிக்கைகள் வந்தவண்ணம் இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அடுத்தமாதம் பிரதமர் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார், அங்கு வெள்ளை மாளிகையில் பிரதமருக்கு அமெரிக்க தலைவர்கள் அரசு விருந்து அளிக்க உள்ளனர். இது குறித்து பேசிய அதிபர் பைடன், பிரதமர் மோடி பேசும் விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதும் உள்ள அனைவரும் விரும்புகிறார்கள். எனக்கு டிக்கெட் தீர்ந்து விட்டது.
மேலும் நீங்கள் இதன்மூலம் எனக்கு உண்மையான பிரச்சனையை உண்டாக்குகிறீர்கள், இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு நபர்களிடமிருந்து அழைப்புகள், திரைப்பட நட்சத்திரங்கள் முதல் உறவினர்கள் வரை அனைவரும் என்னிடம் டிக்கெட்கள் கேட்டு தொந்தரவு அளிக்கின்றனர், நீங்கள் மிகவும் பிரபலமானவர் என மோடியிடம் அதிபர் பைடன் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025