தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்திய 7 பேர் கைது!
காவல்துறையினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்திய 7 பேரை கைது செய்துள்ளனர். குமாரரெட்டியார்புரத்தில் அறவழிப் போராட்டத்தை முன்னின்று நடத்திய மகேஷ் உட்பட 7பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கைது நடவடிக்கையால் குமாரரெட்டியார்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.இதனால் தூத்துக்குடி நகரமே கலவர பூமியாக மாறியது. போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த பலர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.