மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி என்பவர் மதுராந்தகத்தின் புதிய டி.எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விஷ சாராய விவகாரங்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து வருகின்றனர். இதுவரை, தனியார் கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விளம்பூர் விஜயகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.