பிரீமியர் லீக் சாம்பியன்ஷிப் பட்டம்… தொடர்ந்து 3-வது முறையாக வென்று மான்செஸ்டர் சிட்டி அசத்தல்.!
மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து 3வது முறையாக பிரீமியர் லீக் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்தில் நடத்தப்படும் மிகப்பெரும் கால்பந்து தொடரான பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக மான்செஸ்டர் சிட்டி அணி வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்டிடம் அர்செனல் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, பெப் கார்டியோலாவின் அணி தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக, பட்டத்தை வென்றது.
கடந்த ஆறு சீசன்களில் பெப் கார்டியோலாவின் கீழ் மான்செஸ்டர் சிட்டி முதலிடத்தைப் பெறுவது இது ஐந்தாவது முறையாகும். மான்செஸ்டர் சிட்டி தற்போது மொத்தம் ஒன்பது பிரீமியர் லீக்/ஆங்கில முதல் பிரிவு(First Division) பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.<
THREE-PEAT COMPLETE! ✅
Manchester City win their fifth Premier League title in the last six years. pic.twitter.com/bedSZEjARd
— NBC Sports Soccer (@NBCSportsSoccer) May 20, 2023
/p>