கர்நாடகா முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து…!
கர்நாடகா முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், கர்நாடகா முதல்வரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும், துணைக்கு முதல்வராக டி.கே.சிவகுமாரும் அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றனர். இருவருக்கும் மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சித்தராமைய்யாவுக்கும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.