அமெரிக்காவுக்கு பதிலடி..! ஒபாமா உள்பட 500 பேருக்கு தடை விதித்தது ரஷ்யா!

Barack Obama

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக ரஷ்யாவில் இருந்து தடை செய்யப்பட்ட 500 அமெரிக்கர்களில் பராக் ஒபாமா ஒருவர்.

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட 500 பேருக்கு தடை விதித்தது ரஷ்யா. உக்ரைன் மீதான போரால் அமெரிக்கா அடுத்தடுத்த பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. அந்தவகையில், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்பட 500 பேர் ரஷ்யாவிற்குள் நுழைய அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தப் பட்டியலில், ஒபாமாவைத் தவிர, முன்னாள் அமெரிக்க தூதர் ஜான் ஹன்ட்ஸ்மேன், பல அமெரிக்க செனட்டர்கள், சார்லஸ் கியூ பிரவுன் ஜூனியர் உட்பட பல முக்கிய பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்