5 வாக்குறுதிகள் இன்றே நிறைவேற்றம்.! கர்நாடக முதல்வர் சித்தராமையா சூப்பர் அறிவிப்பு.!
முதல்வராக பொறுப்பேற்றபின்னர், 5 வாக்குறுதிகள் இன்றே நிறைவேற்றம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா மேடையில் அறிவித்தார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, புதிய முதல்வராக சித்தராமையாவை அறிவித்தது. அதே போல துணை முதல்வராக டி.கே.சிவகுமார் அறிவிக்கப்பட்டார். இவர்களுக்கான பதவியேற்பு விழா இன்று பெங்களூருவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
புதிய முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் 8 புதிய அமைச்சர்களுக்கு கர்நாடக மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் பேசிய சித்தராமையா, பல்வேறு பணிகளுக்கு மத்தியில் விழாவுக்கு வந்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
மேலும் பேசிய அவர், இன்றே கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு 2000 ரூபாய் உதவி தொகை , வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை, மகளிருக்கு இலவச பேருந்து சேவை (டவுன் பஸ்) ஆகியவை மிக முக்கிய அறிவிப்புகளாக பார்க்கப்படுகிறது.