சென்னையில் 23 பேர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை – காவல் ஆணையர்
நடப்பாண்டில் இதுவரை 181 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நடப்பாண்டில் இதுவரை 181 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்ற செயல்கள் நடக்காமல் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். சட்டவிரோத செயலிகளில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.