#BREAKING : பொதுமக்கள் கவனத்திற்கு..! ரூ.2000 நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் – ரிசர்வ் வங்கி
புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது. மே மாதம் 23ஆம் தேதியிலிருந்து ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2018-19 ஆம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும், தினமும் 20,000 ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
₹2000 Denomination Banknotes – Withdrawal from Circulation; Will continue as Legal Tenderhttps://t.co/2jjqSeDkSk
— ReserveBankOfIndia (@RBI) May 19, 2023