ஜப்பானின் ஹிரோஷிமாவில் தரையிறங்கினார் பிரதமர் மோடி!
ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானின் ஹிரோஷிமாவில் தரையிறங்கினார்.
ஜப்பான் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் புறப்பட்டு சென்றார். ஜப்பான் சென்றுள்ள பிரதமர், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானின் ஹிரோஷிமாவில் தரையிறங்கினார்.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில், ஜப்பான் அதிபரின் கீழ் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். சர்வதேச அளவில் கனடா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஜி7 எனும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் வருடாந்திர மாநாடு இன்று ஜப்பானில் தொடங்குகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த G7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. எனவே, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் ஜப்பான் சென்றுள்ளார். இதுபோன்று, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் ஜி-7 மாநாட்டை கலந்துகொள்வதற்கு ஜப்பானிற்கு வருகை தந்துள்ளனர்.
உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி உள்ளிட்ட மற்ற உலகத் தலைவர்கள் ஹிரோஷிமாவில் உள்ள அமைதி நினைவிடத்திற்கு சென்று போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். மேலும், மகாத்மா காந்தியின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
#WATCH | Prime Minister Narendra Modi arrives in Hiroshima, Japan.
He will attend the #G7Summit under the Japanese Presidency at the invitation of Fumio Kishida, Prime Minister of Japan. pic.twitter.com/3DqZgMuRt3
— ANI (@ANI) May 19, 2023