ஒரேஒரு கிங் தான்… விராட் கோலிக்கு பாகிஸ்தான் பிரபலம் புகழாரம்.!
கிரிக்கெட்டில் ஒரு கிங் தான், அது விராட் கோலி தான் என பாகிஸ்தான் வீரர் முகமது ஆமிர் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி சதமடித்து அசத்தினார். கேப்டன் டுபிளெஸ்ஸியுடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி க்ளாஸன் அதிரடி சதத்துடன் 20 ஓவர்களில் 186/5 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள்(12 போர்கள், 4 சிக்ஸர்கள்) மற்றும் டுபிளெஸ்ஸி 71 ரன்கள்(7 போர்கள், 2 சிக்ஸர்கள்) குவித்தனர். கோலியின் இந்த ஆட்டத்தை பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.
கோலி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பிவிட்டார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் விராட் கோலியின் பேட்டிங்கை பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்வீட்டில், கிரிக்கெட்டில் ஒரு கிங் தான், அது விராட் கோலி தான். உங்களது ஆட்டம் சிறப்பாக இருந்தது. தலை வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.
what a inning by one and only the real king @imVkohli take a bow. pic.twitter.com/3wOA8hj0Ki
— Mohammad Amir (@iamamirofficial) May 18, 2023