1,100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு பைபிள் அமெரிக்காவில் ரூ.314 கோடிக்கு விற்பனை.!

Bible Hebrew

உலகின் மிகப் பழமையான ஹீப்ரு பைபிள் அமெரிக்காவில் ரூ.314 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பழமையானது எனக் கூறப்படும் 1,100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு பைபிள் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் 38.1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.314 கோடி)க்கு விற்பனை ஆகியுள்ளது.

தி கோடக்ஸ் சாஸூன்(The Codex Sassoon) எனப்பெயரிடப்பட்ட இந்த பைபிள் முன்னாள் அமெரிக்க தூதர் ஆல்ஃபிரட் மோசஸ் என்பவரால் இலாப நோக்கமற்ற சார்பில் வாங்கப்பட்டு, இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள யூத மக்களின் ANU அருங்காட்சியகத்திற்கு பரிசளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான கோடெக்ஸ் சாஸூன், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றிலேயே மிகவும் பழமையான, முழு வடிவிலான ஹீப்ரு பைபிள் ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்