அடுத்த பிரதமர் பிரணாப்முகர்ஜி ! RSS ன் ரகசிய தகவல்…பீதியை கிளப்பும் சிவசேனா..!

Default Image
மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் சிவசேனா இடம் பெற்றுள்ளது. ஆனாலும், சிவசேனா பா.ஜ.க அரசையும், பிரதமர் மோடியையும் கடுமை யாக விமர்சனம் செய்து வந்தது.
Image result for shiv sena
சிவசேனாவுடன் கூட்டணியை தக்க வைத்துக் கொள்ளவும், அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் பா.ஜ,க தலைவர் அமித்ஷா சமீபத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக இருவரும் ஆலோசனை செய்தனர்.
இதற்கிடையே தங்களுக்கு 152 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பா.ஜ.க.வுக்கு சிவசேனா நிபந்தனை விதித்துள்ளது. முதல்வர் பதவியை கைப்பற்றும் நோக்கில் இந்த நிபந்தனையை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தேர்தலை தனித்து சந்திக்கவே சிவசேனா தயாரக உள்ளது.
இந்த நிலையில் 2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம் என்று சிவசேனா தெரிவித்து உள்ளது. பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே சிவசேனா இதை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில் கூறி இருப்பதாவது-Image result for 2019 elections
2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜக.வுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம். டெல்லியில் உள்ள அரசியல் சக்திகள் இந்த முடிவை எடுக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.
இதேபோல ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பிரதமர் வேட்பாளருக்கு மாற்றாக பிரணாப்பை நிறுத்தும் முயற்சியிலும் ஈடுபடலாம். ஆர்.எஸ்.எஸ். விழாவில் அவர் பேசியதை ஆர்.எஸ்.எஸ். பாராட்டி இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று பா.ஜ.க ஏற்கனவே அறிவித்து விட்டது. இது குறித்து பா.ஜ.க கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. சிவசேனா தான் தற்போது கருத்து தெரிவித்துள்ளது.
Image result for pranav mukerji
முன்னாள் ஜனாதிபதியும் காங்கிரஸ் மூத்த தலை வருமான பிரணாப்முகர்ஜி சமீபத்தில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்