தபால் மூலம் பிரசாதம்.. திருக்கோயில் செயலி! – திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

sekarbabu

கோயில் விவரங்களை பக்தர்கள் அறிந்து பயன்படுத்தும் வகையில் திருக்கோயில் செயலி தொடக்கம்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் பல்வேறு தகவல்களை எளிதாக அறியும் வகையில் ‘திருக்கோயில்’ என்ற கைபேசி செயலியை சென்னையில் தொடங்கி வைத்தார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. தல வரலாறு, கட்டணம் விவரம், திருவிழாக்கள் போன்ற தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் செயலி உள்ளது. மேலும், அன்னதானம், கோயில் திருப்பணிகளுக்கு நன்கொடை அளிக்கும் வகையிலும் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, கோயில் பிரசாதங்களை பக்தர்களின் இல்லங்களுக்கு தபால் மூலம் அனுப்பும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு சென்னை நுங்கப்பாக்கத்தில் தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயில் முறைகேடு குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம்., விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்