ஜல்லிக்கட்டு தீர்ப்பு…தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி…எடப்பாடி பழனிசாமி ட்வீட்.!!

EPS about jallikattu

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ள  நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி என ட்வீட் செய்துள்ளார். 

நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறிருப்பதாவது ” மாண்புமிகு அம்மா அரசின் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மூலமாக இன்றைக்கு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு  உறுதி செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.


ஜல்லிக்கட்டு தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்று சட்டமன்றம் அறிவித்துள்ளது.அஇஅதிமுக ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த உச்சநீதிமன்றத்தின் கருத்தை வரவேற்கிறேன். ஜல்லிக்கட்டிற்கு அனுமதி பெற அஇஅதிமுக அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பல்வேறு முறை வலியுறுத்தியதன் காரணமாகவும், கழக ஆட்சிக்குப் பின்னரும் அஇஅதிமுக தன்னையும் மனுதாரராக இணைத்துக் கொண்டு எடுத்த அனைத்து சட்டபோராட்டங்களுக்கும் துணை நின்ற தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு வழக்கு 

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி  கடந்த 2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த மாபெரும் போராட்டத்தை அடுத்து ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கான அவசர சட்டமும் இயற்றப்பட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், தமிழக அரசு வகுத்த அவசர சட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், இதன் விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கபில்சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டம், ஜனாதிபதி ஒப்புதலுடன் இயற்றப்பட்டதை எடுத்துக்கூறியதோடு, காளைகள் துன்புறுத்தல் என்பது வெறும் கட்டுக்கதை என பல்வேறு வாதங்கள் விரிவாக முன்வைக்கப்பட்டது.

இதன்பின், ஜல்லிக்கட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.  

ஜல்லிக்கட்டு தீர்ப்பு :

அதன்படி, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு வாதம் திருப்தி அளிக்கும் விதமாக உள்ளது. என கூறி , தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP
Court - Nellai
low pressure - Bay of Bengal