வெயில் நேரத்தில் என்ன செய்யவேண்டும் என்ன செய்ய கூடாது.? தமிழக அரசு கூறிய சில அறிவுரைகள்…

Summer

இந்த கோடை காலத்தில் என்ன செய்யவேண்டும் என்ன செய்ய கூடாது என தமிழக அரசு பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை குறிப்பிட்டுள்ளது. 

தற்போது கோடை காலம் என்பதால், பல்வேறு இடங்களில் வெயில் அளவு சதமடித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த தண்ணீர் நிறைய அருந்தியும், தேவையில்லாமல் வெளியில் செல்வதையும் தவிர்த்து தங்களை காத்துகொண்டு வருகின்றனர்.

 இந்த வெயிலை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதில்,

  • உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவசியமான தேவைகள் தவிர்த்து அனாவசியமாக வெளியில் செல்ல கூடாது.
  • அவசிய தேவைக்கு சென்றால் குடை எடுத்து செல்லுங்கள்.
  • நீர் ஆகாரங்களான இளநீர், மோர், பழசாறு உள்ளிட்டவைகளை பருகுங்கள். பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • வெப்பம் நமது உடலை பாதிக்காமல் இருக்க தளர்ந்த உடைகளை அதுவும், காட்டன் உடைகள் மட்டும் உடுத்துங்கள்.
  • உடல் சோர்வு, மயக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள். செருப்பில்லாமல் வெறும் காலால் வெளியில் செல்ல கூடாது.
  • 12 மணி முதல் 3மணி வரையில் கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானோர் வெளியில் செல்ல கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்