சேப்பாக்கத்தில் IPL பிளே ஆஃப் போட்டிகள்… சில மணிநேரத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்.!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் சில மணிநேரங்களில் விற்று தீர்ந்தது.
ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெரும் பிளே ஆப் தகுதி சுற்று போட்டிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதற்கான டிக்கெட் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு ஆன்லைனில் துவங்கும் என என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக ரசிகர்கள் நீண்ட வரிசையில் இரவு முழுக்க காத்திருக்கும் நிலை இன்று இல்லை. சரியாக 12 மணிக்கு ஆன்லைன் வாயிலாக மட்டுமே டிக்கெட் விற்பனை தொடங்கியது.
தொடங்கிய சில மணிநேரத்திலேயே 2 பிளே ஆப் போட்டிக்கான டிக்கெட்களும் முழுதாக விற்று தீர்ந்தது. இதில் 2000, 2500, 3000, 5000 ஆகிய விலைகளில் இந்த டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் எந்த நாளில் சென்னை அணி விளையாட போகிறது என்ற தகவல் தற்போது வரை உறுதியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.