அதிகார வேட்கையில் அழிந்து கொண்டிருக்கிறது காங்கிரஸ் – நாராயணன் திருப்பதி

narayanan thirupathy

கர்நாடகத்தில் ஜனநாயகம் அளித்த வெற்றியை குழி தோண்டி புதைத்துள்ளது காங்கிரஸ் கட்சி என நாராயணன் திருப்பதி ட்வீட். 

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் பெரும்பாண்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், கர்நாடகா முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக கர்நாடகா முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கர்நாடகத்தில் ஜனநாயகம் அளித்த வெற்றியை குழி தோண்டி புதைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஐந்து நாட்களாகியும் இது வரை முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்ய முடியாமல் கோஷ்டி பூசலில் சிக்கி திணறி, வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது காங்கிரஸ்.

எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள் என்பதை மீண்டும் நிரூபணம் செய்வதோடு, மக்களை முட்டாள்களாக எண்ணி மலிவு அரசியலை செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிகார வேட்கையில் அழிந்து கொண்டிருக்கிறது காங்கிரஸ்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்