துணை ஜனாதிபதிக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து!

Jagdeep Dhankhar

குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.

நாட்டின் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஜெகதீப் தன்கர் பிறந்தநாளையொட்டி, குடியரசு தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்க பதிவில், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பல ஆண்டுகள் நாட்டுக்காக சேவை செய்ய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, அவருக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளும் தேச சேவையில் இருக்க வாழ்த்தினார்.  ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கித்தானா கிராமத்தில் 1951 இல் பிறந்த தன்கர், ஆகஸ்ட் 11, 2022 அன்று இந்தியாவின் 14 வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்