தமிழக முதல்வர் வரலாறு படைத்துள்ளார்.! அமைச்சர் உதயநிதி டிவீட்.!
மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு புதிய ஐஏஎஸ் அதிகாரியை நியமித்த முதல்வருக்கு நன்றி என உதயநிதி ஸ்டாலின் டிவீட் செய்துள்ளார் .
தமிழக அரசு அண்மையில், ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி உத்தரவிட்டது. அதில் மாற்றுத்திறனாளி துறைக்கு தனியாக ஓர் ஐஏஎஸ் அதிகாரி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் இந்த புதிய உத்தரவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார் =.
அவர் பதியைவிட்டுள்ள டிவீட்டில், மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்திற்கு என தனிப்பொறுப்புடன் கூடிய ஆணையர் வேண்டுமென சட்டமன்றத்தில் வலியுறுத்தி இருந்தேன். அதனை தொடர்ந்து தற்போது, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக IAS நிலை அதிகாரியை மாற்றுத்திறனாளிகள் நல துறை ஆணையராக நியமித்து வரலாறு படைத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர்களுக்கு நன்றி என அதில் பதிவிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்துக்கு தனிப்பொறுப்புடன் கூடிய ஆணையர் வேண்டுமென சட்டமன்ற கன்னிப்பேச்சில் வலியுறுத்தினோம். அந்த வகையில், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக IAS நிலை அதிகாரியை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராக நியமித்து வரலாறு படைத்துள்ள…
— Udhay (@Udhaystalin) May 17, 2023