#BREAKING : விஷச்சாராய உயிரிழப்பு – அறிக்கை கேட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி…!
விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் ஆர்.என் ரவி அறிக்கை கேட்டுள்ளார்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் விஷ சாராயம் குடித்து இதுவரை 22 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் ஆர்.என் ரவி அறிக்கை கேட்டுள்ளார். 22 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரங்களையும் கோரியுள்ளார். மேலும், விஷ சாராயம் எப்படி விற்கப்படுகிறது? விற்கப்படவில்லை எனில் இத்தனை பேர் கைது ஏன் போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.