ஒடிசாவில் வந்தே பாரத்..! நாளை ரூ.8,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!
ஒடிசாவில் வந்தே பாரத் ரயில் சேவையை முதல் முறையாக காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர்.
ஒடிசா மாநிலத்தில் ரூ.8,000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார. நாளை மதியம் 12:30 மணிக்கு, ஒடிசாவில் உள்ள பூரி மற்றும் கட்டாக் ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
அதுமட்டுமில்லாமல், ஒடிசா மாநிலம் புரி – மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இதுவரை பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை நேரில் சென்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நாளை முதல் முறையாக ஒடிசாவில் காணொலி காட்சி மூலம் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
Tomorrow at 12:30pm, PM Narendra Modi will lay the foundation stone of the redevelopment of Puri and Cuttack railway stations in Odisha.
In pics – the redeveloped Puri station pic.twitter.com/rs5plb1MFN
— ANI (@ANI) May 17, 2023