முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்கான சரியான தீர்வு இதோ..!

வீட்டில் தயாரிக்கக்கூடிய ஹேர் மாஸ்க்குகளால் முடி உதிர்வை குறைப்பது எப்படி?

இன்று பலருக்கு முடி உதிர்வு பிரச்சனை காணப்படுகிறது. இதனை தடுக்க நாம் கடைகளில் கெமிக்கல் கலந்த கலவைகளை பயன்படுத்தும் போது சில பக்க விழாவுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதைவிட நாம் நமது கைகளாலேயே ஹேர் மாஸ்க் செய்து உபயோகப்படுத்தினால், நமது முடி ஆரோக்கியமாக வளரும்.

தற்போது இந்த பதிவில், வீட்டில் தயாரிக்கக்கூடிய ஹேர் மாஸ்க்குகள் குறித்து பார்ப்போம்.

hair growth
hair growth Imagesource Nykaa

முட்டை மாஸ்க் 

தேவையானவை

  • 1 முட்டை
  • 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் தேன்

செய்முறை 

ஒரு பாத்திரத்தில், முட்டையை ஊற்றி நன்றாக அடிக்கவும். முட்டையுடன் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து மென்மையான கலவையை உருவாக்கவும். கலவையை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும். பின் அந்த மாஸ்க்கை சுமார் 30 நிமிடங்கள் விடவும். வழக்கம் போல் குளிர்ந்த நீர் மற்றும் ஷாம்பூவுடன் உங்கள் தலைமுடியை நன்கு கழுவவும்.

தயிர் மற்றும் வெந்தய மாஸ்க் 

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் வெற்று தயிர்
  • 2 டீஸ்பூன் வெந்தய தூள்

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் வெந்தயப் பொடியை கலந்து பேஸ்ட் செய்யவும்.
இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடிக்கு தடவவும், எல்லா முடிகளிலும் இந்த கலவை அப்ளை செய்யப்பட்டுள்ளதா என்று உறுதி செய்த பின்,
சுமார் 30 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். பின் நீரில் கழுவ வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.