இன்று இந்தியா-கென்யா கண்டங்களுக்கான கால்பந்து இறுதிப்போட்டியில் மோதல்!

Default Image

இந்தியா-கென்யா அணிகள் கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து இறுதிப்போட்டியில் இன்றிரவு மோதுகின்றன.
மும்பையில் கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர்  நடந்து வருகிறது. 4 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தன.

இதையடுத்து கோல் வித்தியாசம் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-கென்யா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கென்யாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்த இந்திய அணி மீண்டும் கென்யாவை இறுதிப்போட்டியில் சந்திக்கிறது. இந்திய அணியின் கேப்டன் சுனித் சேத்ரி இந்த போட்டி தொடரில் 6 கோல்கள் அடித்து நல்ல பார்மில் உள்ளார்.

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்