உத்தரப்பிரதேசத்தில் கன மழையால் 26 பேர் பலி!
26 பேர் உத்தரப்பிரதேசத்தில் பெய்த கன மழையின் போது இடி மின்னல் தாக்கியும் மின்சாரம் தாக்கியும் உயிரிழந்தனர். பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டியது.
புழுதிப்புயல் வீசியதையடுத்து உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதை சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.