உரத்தின் விலை அதிகரிக்கப்படாது – மத்திய அமைச்சர் மனசுக்கு மாண்டவியா

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உரத்தின் விலையை அதிகரிக்க கூடாது என்று முடிவு.

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உரத்தின் விலையை அதிகரிக்க கூடாது என்று முடிவெடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் உரம் மானியத்திற்காக 1.08 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. யூரியாவுக்கு ₨70,000 கோடியும், டி-அம்மோனியம் பாஸ்பேட்டுக்கு ₨38,000 கோடியும் அரசு செலவிடும்.

நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரம் கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமை. சர்வதேச சந்தையில் உரம் மீதான விலை மாற்றங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.