கான்பூரில் நோயாளிகள் மரணம் – சுகாதார துறைஅமைச்சர் பதவி விலக காங். வலியுறுத்தல்..!

Default Image
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவ கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் கீழ் லாலா லஜ்பத் ராய் என்கிற மருத்துவமனை இயங்கி வருகிறது.
இங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 5 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விசாரணையில், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஏ.சி. எந்திரங்கள் கடந்த சில தினங்களாக வேலை செய்யவில்லை. அதனால் வெயிலின் தாக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் முதியவர்கள் உயிரிழந்தனர் என அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.
இந்நிலையில், கான்பூர் மருத்துவமனையில் ஏசி பழுதால் நோயாளிகள் இறந்ததற்கு பொறுப்பேற்று, மாநில சுகாதார துறை மந்திரி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், ஏற்கனவே கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் பலியாகி உள்ளனர். தற்போது கான்பூர் மருத்துவமனையில் ஏசி பழுதால் நோயாளிகள் இறந்துள்ளனர். இதற்கு பொறுப்பேற்று மாநில சுகாதார துறை மந்திரி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்