அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..’லிச்சி’ பழத்தில் இவ்வளவு நன்மைகளா..?

Lychee Benefits

கோடை காலத்தில் மட்டுமே சந்தையில் கிடைக்கும் இந்த இனிப்பான ‘லிச்சி’ பழத்தை நம்மில் பலர் ஆண்டு முழுவதும் விரும்பி சாப்பிடுகிறோம். இந்த பழத்தை எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இப்பழம்  தனித்துவமான மற்றும் வலுவான இனிப்பு சுவை கொண்டிருப்பதால்,  ஐஸ்கிரீம்கள், பழச்சாறுகள், போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

Lychee
Lychee [Image source : wallpaperflare]

மேலும், இந்த சுவையான பழம் அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளது.  இது நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இந்த பழம் உங்களு பிடிக்கவில்லை என்றலும் கூட, அவற்றின் ஆரோக்கிய நன்மைகளை அறிந்த பிறகு நீங்கள் அவற்றை விரும்பத் தொடங்குவீர்கள்.

இந்நிலையில், லிச்சியின் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி விரிவாக பார்க்கலாம். 

1. செரிமானத்திற்கு மிகவும் நல்லது 

Lychee
Lychee [Image source : wallpaperflare]

உணவை சாப்பிட்ட பிறகு இந்த லிச்சி பலத்தை சாப்பிட்டால் நமக்கு  செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது.  இது தவிர, தில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

2.இரத்த அழுத்தத்தைச் சீராக்கும்

Lychee
Lychee [Image source : wallpaperflare]

லிச்சி பலத்தை சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தம் சீராகிறது. உயர் இரத்த அழுத்தம் என்பது நம்மில் பலர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினை. உங்கள் உணவில் லிச்சிஸைச் சேர்ப்பதன் மூலம் இயற்கையாகவே இதைக் குறைக்கலாம். லிச்சியில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது, இது ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

3. நீரிழிவு நோயைத் தடுக்கும் 

Lychee
Lychee [Image source : wallpaperflare]

லிச்சி என்பது ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்களில் ஒன்றாகும். இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தம், நீரிழிவு நோயைத் தடுக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

Lychee
Lychee [Image source : wallpaperflare]

நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவு ஒரு சிறந்த ஆதாரம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவும் பல உணவுகள் இருந்தாலும், லச்சி பழம் ஒரு சிறந்த இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த பழத்தில் ‘வைட்டமின் சி’ நிரம்பியுள்ளது, இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

5. தோல் மற்றும் முடிக்கு நல்லது

Lychee
Lychee [Image source : wallpaperflare]

சருமத்தை ஆரோக்கியமாக மாற்ற இயற்கை வழிகளை எப்போதும் தேடுபவர்களில் நீங்களும் ஒருவரா? அப்போ இந்த லிச்சி பழத்தை நீங்கள் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த பழத்தில் ‘வைட்டமின் ஈ” உள்ளது எனவே,  இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சரியான பளபளப்பைக் கொடுக்கவும் உதவுகிறது. கூடுதலாக, ‘வைட்டமின் ஈ’ சூரிய ஒளி மற்றும் தோல் அழற்சியை குணப்படுத்த உதவுகிறது. மேலும், லிச்சியில் உள்ள தாமிரம் முடி வளர்ச்சியை ஏற்படுத்த உதவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்