விழுப்புரத்தில் அதிர்ச்சி.! ஒருதலை காதல் மோகம்.. வளர்ப்பு பெற்றோரை துப்பாக்கியால் சுட்டு இளைஞர் தப்பியோட்டம்.!
விழுப்புரத்தில் காதல் விவகாரத்தில் வளர்ப்பு பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன் தப்பியோடிவிட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுறம் பகுதியில் கோவிந்தன் என்பவர், அதே ஊரை சேர்ந்த கண்ணன் மகன் பாரதி என்பவரை வளர்ப்பு மகனாக வளர்த்து வந்துள்ளார். பாரதியின் தயார் சிறு வயதிலேயே காலமானதால் கோவிந்தன் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கோவிந்தன் மூத்த மகளை பாரதி ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் திருமணம் செய்ய சொல்லி கேட்டுள்ளார் அந்தபெண்ணிற்கு விருப்பமில்லை என தெரிந்து கோவிந்தன் மற்றும் அவரது மனைவி கலையம்மாள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதனால் ஏற்பட்ட தகராறில் பாரதி, கோவிந்தன் மற்றும் காளியம்மாளை நாட்டு துப்பாக்கி மூலம் சுட்டுள்ளான். இதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனை அடுத்து பாரதி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாரதியை தேடி வருகின்றனர்.