விழுப்புரம் விஷ சாராய உயிரிழப்பு விவகாரம்.! சென்னையில் முக்கிய குற்றவாளி கைது.!

Arrest

விழுப்புரம் விஷ சாராய உயிரிழப்பு விவகாரத்தில் கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் சென்னையில் கைது செய்யப்பட்டள்ளார். 

தமிழகத்தையே உலுக்கி வரும் விஷ சாராய சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி அடுத்தடுத்த கைது சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விஷ சாராயம் குடித்து இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் போலி மதுபானம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரத்தில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடித்தது மனிதர்கள் காய்ச்சும் கள்ளச்சாராயம் இல்லை என்றும், அது கெமிக்கல் தொழிற்சாலையில் வாங்கப்படும் மெத்தனால் எனும் விஷ சாராயம் என்பதும் தடவியல் சோதனையில் தெரியவந்ததாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்து இருந்தார். மேலும் இந்த விஷ சாராயம் அங்கு எப்படி விற்பனை செய்யப்பட்டது என வேலு மற்றும் பனையூர் ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில், நேற்று சென்னை மதுரவாயல் பகுதியில்கெமிக்கல் தொழிற்சாலை நடத்தி வரும் இளையநம்பி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து தான் 1000 லிட்டர் மெத்தனால் வாங்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இளையநம்பியிடம் , மெத்தனால் எங்கு யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்ற விவரம் பற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்