கர்நாடக முதலமைச்சர் யார்? – இன்று வெளியாகிறது அறிவிப்பு..!
இன்று கர்நாடகா முதல்வர் யார் என்ற அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே வெளியிட உள்ளதாக தகவல்
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் பெரும்பாண்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், கர்நாடகா முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியும் ஆலோசனை நடத்தி வருகிறது.
அந்த வகையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் சந்தித்துள்ளார். கர்நாடகாவில் யார் அடுத்த முதலமைச்சர் என சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் போட்டியில் உள்ள இரு தலைவர்களும் கார்கேவை சந்தித்து பேசிய நிலையில், முதல்வர் யார் என்பது இன்று இறுதியாக வாய்ப்பு உள்ளது. நேற்று இரவு சோனியா காந்தி, மல்லிகார்ஜுனே கார்கே, ராகுல் கார்கே ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், இன்று கர்நாடகா முதல்வர் யார் என்ற அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.