ஸ்டாலினை பதவி விலக சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை – டிடிவி தினகரன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பதவி விலக சொல்ல ஈபிஎஸ்-க்கு அருகதை இல்லை என டிடிவி தினகரன் பேட்டி.
தமிழகத்தில் இதுவரை விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேரும், செங்கல்பட்டில் 8 பெரும் உயிரிழந்துள்ளனர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஓபிஎஸ்-சும் நானும் நீண்ட கால நண்பர்கள். இன்றைக்கு நானும் எனது நண்பர் ஓபிஎஸ்-ம் இணைந்து விட்டோம். அம்மாவின் தொண்டர்களுக்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் விடமாட்டோம்.
மேலும், அவர் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பதவி விலக சொல்ல ஈபிஎஸ்-க்கு அருகதை இல்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தில் பதவி விலகியிருந்தால் இன்று முதல்வரை பதவிவிலக ஈபிஎஸ் கோரலாம். காவல்துறையின் மெத்தனப் போக்கால் விஷச்சாராய விவகாரத்தில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. போதை கலாசாரத்தால் மாணவர்கள் சீரழிவதை தடுக்க வேண்டும்.