LSG vs MI: டாஸ் வென்ற மும்பை அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு.!
ஐபிஎல் தொடரின் இன்றைய LSG vs MI போட்டியில், டாஸ் வென்று மும்பை அணி முதலில் பவுலிங் தேர்வு.
16-வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிளேஆப் சுற்றுக்கு செல்ல ஒவ்வொரு அணியும் போராடிக்கொண்டிருக்கிறது. இதில் குஜராத் அணி முதல் அணியாக பிளேஆப்ஸ்-க்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இன்று லக்னோ ஏக்னா ஸ்டேடியத்தில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்கு இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் மும்பை அணி 14 புள்ளிகளும், லக்னோ அணி 13 புள்ளிகளும் பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று வெல்லும் அணிக்கு பிளேஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு மேலும் பிரகாசமாகும்.
இதனால் இரு அணிகளும் இன்றைய போட்டியை வெல்ல கடுமையாக போட்டி போடும் என்பதில் சந்தேகமில்லை. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
மும்பை அணி: ரோஹித் சர்மா(C), இஷான் கிஷன்(W), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா, டிம் டேவிட், ஹிருத்திக் ஷோக்கீன், கிறிஸ் ஜோர்டன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால்
லக்னோ அணி: குயின்டன் டி காக்(W), தீபக் ஹூடா, பிரேராக் மன்காட், க்ருனால் பாண்டியா(C), மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, நவீன் உல் ஹக், ரவி பிஷ்னோய், ஸ்வப்னில் சிங், மொஹ்சின் கான்