மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல்..! போலீசார் தீவிர விசாரணை!

Nitin Gadkari

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல்.

மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நேற்று மாலை (திங்கள்கிழமை) அவரது டெல்லி இல்லத்தில் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. அமைச்சரின் அலுவலகம், இது குறித்து டெல்லி காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளது.

இதன் பின்னர் டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் வீட்டுக்கு வந்த கொலை மிரட்டல் அழைப்பு தொடர்பான தகவலை அமைச்சரின் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. போலீஸ் வட்டாரங்களின்படி, விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக கூறியுள்ளனர்.

இந்த ஆண்டில் நிதின் கட்கரிக்கு அவரது அலுவலகத்தில் கொலை மிரட்டல் அழைப்பு வருவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக ஜனவரியில், மகாராஷ்டிராவில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு இதுபோன்ற அழைப்புகள் வந்ததாகவும், அழைப்பாளர் கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர் என நாக்பூர் போலீசார் தெரிவித்தனர்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு சிறையிலிருந்து மிரட்டல் விடுக்கப்படுகிறது. அழைப்பாளர் ஒரு பிரபல குண்டர் மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேஷ் காந்தா, பெலகாவி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் சட்டவிரோதமாக போனை பயன்படுத்தி கட்காரியின் அலுவலகத்தை மிரட்டினார் என்று நாக்பூர் போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் ஒருமுறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்