ஹோண்டாவின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லேட்டஸ்ட் ‘எலிவேட் எஸ்யூவி’… ஜூன் 6இல் அறிமுகம்.!

Honda Elevate

ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் அதன் சமீபத்திய எலிவேட் எஸ்யுவியின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.

சொகுசுப் பயணங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் கார்களில், எஸ்யுவி கார்கள் இன்னும் கொஞ்சம் அதிகம் அனைவராலும் விரும்பப்படும் ஸ்போர்ட்ஸ் மாடல்களில் வருவதால் அதன் மதிப்பு, நம்பகத்தன்மை, வேகம் இவைகளில் கவனம் ஈர்க்கும் விதமாக ஹோண்டா நிறுவனம் புதிதாக அதன் எலிவேட் எஸ்யுவியை அறிமுகப்படுத்தவுள்ளது.</

p>

எலிவேட் எஸ்யுவி(Elevate SUV):

ஹோண்டா கார் இந்தியா நிறுவனம், எலிவேட் எஸ்யுவியை ஜூன் 6 ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இதனை ஹோண்டா நிறுவனம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது. மே மாத தொடக்கத்தில் எலிவேட் என எஸ்யுவியின் பெயரை அறிமுகப்படுத்திய ஹோண்டா நிறுவனம், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக எலிவேட் எஸ்யூவியை களமிறக்குகிறது.

உலகளவில் எஸ்யுவிக்களின் மயமாக உள்ளநிலையில், ஹோண்டா நிறுவனத்தின் புதிய உலகளாவிய மாடலாக எலிவேட் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோண்டா எலிவேட்டை அறிமுகப்படுத்தும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என நிறுவனம் தெரிவித்தது.

அம்சங்கள்:

சமீபத்தில் சோதனை ஓட்டத்தில் கார் வெளிவந்ததாக கூறப்படும் நிலையில், எலிவேட் எஸ்யுவி யில் 360 டிகிரி பின்புற கேமரா வசதி, பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு(Temperature control) மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி(Cruise Control) ஆகியவை இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய தகவல்களின்படி ஹோண்டா எலிவேட் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் 120 பிஎச்பி ஆற்றலுடன், மெலிதான மற்றும் கூர்மையான LED ஹெட்லைட்கள் மற்றும் முன்புறத்தில் ஒரு பெரிய கிரில், மல்டி-ஸ்போக் 16 அங்குல அலாய் வீல்களுடன் மற்றும் டாப் மாடல்களில் அடாஸ் (ADAS-Advanced Driver Assistance Systems) எனும் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியாக உள்ளதாக தகவல்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்