எங்கள் தாய்நாட்டிற்கான அர்ப்பணிப்புக்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..மோடி குறித்து ஜடேஜா நெகிழ்ச்சி பதிவு.!!

Ravindrasinh jadeja meet Pm modi

பிரதமர் நரேந்திர மோடியை இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தனது மனைவி ரிவாபா ஜடேஜாவுடன் சமீபத்தில் சந்தித்துள்ளார். அவர்கள் இருவரையும் பிரதமர்  வரவேற்றார். இது தொடர்பான எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள ஜடேஜா மோடி குறித்து நெகிழ்ச்சியாக  பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டரில் ரவீந்திர ஜடேஜா ” நரேந்திரமோடி உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் தாய்நாட்டிற்கான கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. முடிந்தவரை சிறந்த முறையில் அனைவரையும் ஊக்குவிப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், ஜடேஜாவின் மனைவி ரிவாபா ரவீந்திரசிங்  பாஜக கட்சியின் உறுப்பினராக ஜாம்நகர் வடக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து குஜராத் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்