விளையாட்டு வீரர்களின் வருமானத்தில் பங்கு முடிவை ரத்து செய்தார் அரியானா முதல்வர்..!

Default Image
அரியனா மாநில அரசு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. விளையாட்டு துறையை மேம்படுத்தும் ஒரு பகுதியாக அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டது.
விளம்பர வருவாய், தொழில்முறை போட்டிகளில் வரும் வருமானத்திலும் பங்கு செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அம்மாநில விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டம் அதிகமாக சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு சரியாக இருக்கும். ஆனால் மற்றவர்கள் பெரிய அளவில் சம்பாதிப்பதில்லை என்பதால் அவர்களை இந்த திட்டமானது பாதிக்கும் என கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், விளையாட்டு துறையின் இந்த உத்தரவை அம்மாநில முதல்வர் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 30-ம் தேதியிட்ட அந்த அரசு உத்தரவை நிறுத்தி வைக்க தான் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் 22 பதக்கங்கள் வென்று அசத்தினர். இதையடுத்து அவர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதே சமயம் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை குறைக்க மாநில அரசு திட்டமிட்டது.
இதன்காரணமாக வீரர்கள் அந்த விழாவில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பாராட்டு விழா ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்