பீகாரில் மொத்தத்தை விட அதிக மதிப்பெண்கள்!தேர்வு எழுதாத பாடங்களுக்கும் மதிப்பெண்!குளறுபடியால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள்
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் பீகாரில் சில மாணவர்களுக்கு சில பாடங்களில் மொத்த மதிப்பெண்ணைவிட அதிக மதிப்பெண் வழங்கியிருப்பதும், தேர்வே எழுதாத ஒருசிலருக்கு மதிப்பெண்கள் வழங்கியிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் பள்ளித் தேர்வு வாரியம் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 53விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில் கொள்குறி வினாவிடைப் பகுதியில் மொத்த மதிப்பெண்ணான 35க்குப் பதில் சில மாணவர்களுக்கு 37, 38 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் உயிரியல் பாடத்தில் தேர்வெழுதாத மாணவிக்கு 18 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.